கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் உரவிற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட இதர பயிர்களுக்குத் தேவையான யூரியா 3,466 டன், டிஏபி 626 டன், பொட்டாஷ் 1,721 டன் என மொத்தம் 2,949 டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால், உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை செய்தாலோ உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்