கரோனா பரவலை தடுக்க - பழநி கோயிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்பட்ட பின்னரே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 7 மணிக்கு மேல் மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரவு 8 மணிக்கு மலைக் கோயிலில் இருந்து பக்தர்கள் அனைவரும் கீழே இறங்கிவிட வேண்டும். கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இரவு 7 மணிக்கு மேல் (வின்ச்) மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்