தேன் மற்றும் தேன் பொருட்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்காக, தேசிய தேனீ வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
தேன் மற்றும் தேன் பொருட்களை இந்தியன் வங்கி, தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் பெறுவதற்கான புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, தேசிய தேனீ வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
‘மது கிரந்தி’
இதைத் தொடர்ந்து, தேன் மற்றும் தேன் பொருட்களை வாங்குவதற்காக, ‘மது கிரந்தி’ என்ற இணையதளத்தை மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.இந்த இணையதளம் மூலம், தேன் மற்றும் தேன் பொருட்களை பெறுவதோடு, அவை எங்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த தேன் பொருட்கள் தரக் கட்டுப்பாடுடன், சிறந்த முறையில் ‘பேக்கிங்’ செய்து சந்தைப்படுத்தும் பணியை தேசிய விவசாய கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago