குமாரபாளையம் நகராட்சியில்கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ஒரு பகுதியில் மூன்று பேருக்கு மேல் கரோனா பாதிப்பு இருந்தால் அப்பகுதி அடைக்கப்படும், என குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் 5 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் குமாரபாளையம் அரசு மருத்துவமனை கரோனா வார்டிலும் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டுதலின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும்.

முகக்கவசம் இல்லாமல் வெளியில் வருவோர், கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொற்றின் வீரியத்தை உணர்ந்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 3 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் அடைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.குமாரபாளையம் சேலம் சாலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்