கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் - உமிழ்நீர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் : நாராயணசாமி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா அதிகரிப்பால் உமிழ்நீர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு நிர்வாகத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவு விவரம்:

புதுச்சேரியில் ஜிப்மர், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி கரோனா மையங்களில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தாக்கம் அதிகரிக்க காரணம், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாததுதான். முகக்கவசம் இல்லாமல் சென்றால், அதை அணியுமாறு அறிவுறுத் துவது அவசியம். இதை புதுச் சேரி அரசு நிர்வாகம் செய்ய வேண்டும். கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். உமிழ்நீர் பரிசோதனையை அதிகப்படுத்தினால்தான், கரோனாவை கட்டுப்படுத்தி சிகிச்சை செய்ய முடியும். மருத்துவம் சாராத ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு கர்நாடகம், மகாராஷ்டிராவில் ஒருவருக்கு பரிசோதனை செய்ய ரூ. 600 வரை செலவிடவேண்டியுள்ளது. ஜிப்மரில் இப்பரிசோதனைக்கு ரூ. 2,400 கேட்கிறார்கள். இது அதிகப்படியானது. ஆர்டிபிஆர் கிட் இன்றைய விலை ரூ. 140 தான். ஆர்டிபிசிஆர் பரிசோதனையை ரூ. 500 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

வலைஞர் பக்கம்

49 mins ago

கல்வி

42 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

45 mins ago

ஓடிடி களம்

52 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்