பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் :

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரியிலிருந்து வழிகாட்டு நெறிமுறைகளோடு பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வுக்கு தயாராகும் கால அவகாசம் குறைவாக இருந்ததால், 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டன. வரும் மே 3-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் மாதிரித் தேர்வுகள் நேற்று தொடங்கின. நேற்று இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இன்று (ஏப்.9) வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகளும், நாளை (ஏப்.10) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகளும் நடைபெறும். 12-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகளும், 24-ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெறும். 26-ம் தேதி ஆங்கிலம், 27-ம் தேதி தமிழ் பாடத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கிடையே, ஏப்.16 முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்