நாமக்கல் மாவட்டத்தில் 9.53 லட்சம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 527 வாக்குகள் பதிவாகியது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் , திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலுார் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7 லட்சத்து 2 ஆயிரத்து 462 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 42 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்கள்,161 இதர வாக்காளர் என மொத்தம் 14 லட்சத்து 44 ஆயிரத்து 893 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9 லட்சத்து 53 ஆயிரத்து 527 வாக்குகள் பதிவானது. இதன்படி ராசிபுரம் (தனி) தொகுதியில் 82.05 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுபோல, சேந்தமங்கலம் தொகுதியில் 80.93 சதவீதம், நாமக்கல் 78.56 சதவீதம், பரமத்தி வேலுார் 81.74 சதவீதம், திருச்செங்கோடு 78.71 சதவீதம், குமாரபாளையம் 78.85 சதவீதம் வாக்குப்பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

40 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்