கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது - நடவடிக்கை மேற்கொள்ளஉயர்கல்வித் துறை அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் உயர்வதால், கல்லூரிகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மற்றும் பருவத் தேர்வுகளை தொடரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், செய்முறைத் தேர்வு உள்ளிட்ட முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே மாணவர்களை கல்லூரிக்கு வரவழைக்க வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே சில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

விசாரணை நடத்த உத்தரவு

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவலை தவிர்க்கவே தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதற்கு மாறாக சில கல்லூரிகள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தனியார் கல்லூரிகளின் செயல்பாடு தொடர்பாக விசாரணை நடத்தவும், தவறுகள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் சார்ந்த இயக்குநரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் நிலையை கைவிடவும் தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்