ஆம்பூர் அருகே ஒற்றை யானை அட்டகாசம் : சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வரும் ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த கொத்தூர் மற்றும் பாலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை நுழைந்தது. பாலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரது விவசாய நிலத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கு ஓர் ஏக்கரில் பயரிடப்பட்ட நெற்பயிர்களை சேதப்படுத்தின.பிறகு அங்கிருந்து வெளியேறிய யானை, கார்த்தி - கோமதி ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து அங்கு அரை ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை வேரோடு சாய்த்தன. இது குறித்து ஆம்பூர் வனத் துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி தலைமை யிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள்ளாக ஒற்றை யானை அங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந் தது. பின்னர், யானையால் சேத மடைந்த விவசாய நிலத்தை வனத் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒற்றையானையை ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதி எல்லையில் வனத் துறையினர் முகாம் அமைத்து யானை நடமாட்டத்தை கண் காணிக்க வேண்டும் என்றும், யானையால் சேதமடைந்த பயிர் வகைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்