பஸ்கள், ரயில்கள் மூலம் - சொந்த ஊர் திரும்பிய வாக்காளர்கள் : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

By செய்திப்பிரிவு

வெளியூர்களில் வசிக்கும் தென் மாவட்ட வாக்காளர்கள் ரயில்கள், சிறப்பு பஸ்கள் மூலம் தேர்தல் நாளான இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சொந்த ஊர்களுக்கு அதிகளவில் வந்துள்ளனர். அவர்கள் மூலம் மீண்டும் கரோனா பரவாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தென்மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக திருப்பூர், கோவை, ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வருவர். இன்று தேர்தல் நடப்பதால் வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் பஸ்கள், ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

அதனால், மதுரை ரயில் நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

தமிழக அரசும் சென்னையில் இருந்து வெளியூர் மக்கள் சொந்த மாவட்டங்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை இயக்கியது.

கரோனாவின் தாக்கம் சென்னை யில் அதிகரித்துவரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானோர் திரும்பியுள்ளனர். சுகாதாரத் துறையினர் அவர்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்