என்ஆர் காங்-ஐ வைத்து அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

என்ஆர் காங்கிரஸை வைத்துக் கொண்டு அதிகாரத்துக்கு வர பாஜகநினைக்கிறது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் சரவணனை ஆதரித்து அக்கட் சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியின் அதிகாரத்தை பறிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது.புதுவை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் இன்னொரு நிர்வா கத்தை நடத்தினார். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்த்தார்கள்.

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மோடி அரசின் எடுபிடியாக போய்விட்டனர். சமீபத்தில்நாமக்கலில் நடந்த பொதுக்கூட்டத் தில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தில் ஒரு பொம்மை உற் பத்தி தொழிற்சாலை தொடங்கப் போவதாக தெரிவித்தார். ஏற்கெனவே பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொம்மை யாகத் தான் உள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக அரசைஎப்படி எடுபிடி அரசாக பாஜகவைத்திருக்கிறதோ, அதேபோல் புதுவையிலும் என்ஆர் காங்கிரஸை யும் பொம்மை அரசாக மாற்றிவிடும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட பாஜகவுடன் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

புதுவையில் கடந்த காலத்தில்பாஜக தனியாக வெற்றி பெற்றதுகிடையாது.

ஆனால், இப்போது என்ஆர் காங்கிரஸை வைத்துக் கொண்டு அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கலைப்பார்கள். அல்லது ஆட்சியை சீர்குலைக்க முயற்சிசெய்வார்கள்.

புதுவையில் நடக்கவுள்ள தேர்தலில் மக்கள் எந்த காரணத்தை கொண்டும் பாஜகவை காலூன்றவிடக்கூடாது. ஆட்சிக்கு வருவ தற்கு முன்பே, ஆதாருடன் இணைக் கப்பட்ட தொலைபேசி எண்களை வாங்கி பாஜவுக்கு வாக்களியுங்கள் என்று குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளனர். இது மோசமான அத்துமீறல் என்று குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தின்போது வேட்பா ளர் சரவணன், மத்திய குழு உறுப்பினர் சுதா, பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழுஉறுப்பினர் பெருமாள் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்