கரூர்- சென்னை சாலைகளை இணைக்க வெளிவட்ட சாலை அமைக்கப்படும் : திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

By செய்திப்பிரிவு

திருச்சியில் கரூர் சாலை- சென்னை சாலையை இணைக்கும் வகையில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும் என திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.

திருச்சி சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி.சாலை, அல்லிமால் தெரு, பெரியக்கடை தெரு, ஒத்தைமால் தெரு, மேலரண் சாலை ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: திருச்சியில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்படும். மேம்பாலங்கள் கட்டப்படும். கரூர் சாலையில் இருந்து சென்னை சாலைக்கு செல்லும் வாகனங்களால் சிந்தாமணி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இவ்விரு சாலைகளையும் இணைக்க வெளிவட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பெரிய சவுக், சின்ன சவுக், அரபிக்குளத் தெரு, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசு அமைந்ததும் வணிகர் நலவாரியம் சீரமைக்கப்படும்.

சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த பிரச்சார நிகழ்ச்சியில், திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திமுக பாலக்கரை பகுதி செயலாளர் மண்டி சேகர் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 min ago

இந்தியா

41 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்