வாக்கு எண்ணிக்கை மையத்தில் - அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 496 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூலூர் தொகுதிக்கு 616, கவுண்டம்பாளையத்துக்கு 812,கோவை வடக்குக்கு 599, தொண்டாமுத்தூருக்கு 566, கோவை தெற்குக்கு 359, சிங்காநல்லூருக்கு 539, கிணத்துக்கடவுக்கு 582, பொள்ளாச்சிக்கு 382, வால்பாறை தொகுதிக்கு 353 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள், தடாகம்சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இதையொட்டி, அங்கு ஸ்ட்ராங் ரூம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்