திருப்பத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி : பங்குதாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி பங்குதாரரை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் நகராட்சி, சின்ன குளம் மாரியம்மன் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்த மான நிதி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்கு நராக ரங்கப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் (42) என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இதில், 7 பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.

திருப்பத்தூர், திருவண்ணா மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்நிறுவனத்தில் மாதச்சீட்டு, வாரச்சீட்டு செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இது தவிர பெரிய தொகையை முதலீடு செய்தால், 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் நிதிநிறுவனம் அறிவித்தது. இதையறிந்த பொதுமக்கள் லட்சக்கணக் கான பணத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், முதலீடுக்கான காலக்கெடு முடிவடைந்து பல மாதங்கள் கடந்தும், நிதிநிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நடராஜனிடம் பணத்தை திருப்பிக் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, அவர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி காசோலை வழங்கியுள்ளார்.

அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என காசோலை திரும்பி வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த பொது மக்கள் நிதி நிறுவனத்துக்கு வந்தபோது, அந்நிறுவனம் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் நடராஜன்நடத்தி வரும் ஊதுவத்தி கம்பெனிக்கு சென்று வாடிக்கையாளர்கள் பணத்தை கேட்டபோது, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் பணம் திருப்பி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதையேற்ற பொதுமக்கள் பிரச்சினை ஏதும் செய்யாமல் சென்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் முடிவடைந்தும் பணம் திரும்ப கிடைக்காததால் பொறுமை யிழந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஊதுவத்தி கம்பெனிக்கு சென்றனர்.

அங்கு நடராஜன் இல்லாத தால் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த வர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் - வெங்களாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையி லான காவல் துறையினர் அங்கு சென்றனர்.

பிறகு, நடராஜன் மற்றும் பங்குதாரர் பாபு ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை கண்டதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நடராஜன் மற்றும் பாபுவை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பொது மக்களிடம் இருந்து நடராஜன் மற்றும் பாபுவை மீட்ட காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விசாரணை செய்து நடராஜன் மற்றும் பங்கு தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்