முதியவர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி: மதுரை ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், சட்டப் பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று முதல் 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயது முதல் 59 வயது வரை நாள்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.அனைத்து அரசு வட்டார சுகாதார நிலையங்களிலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் இலவசமாக போடப்படுகிறது. பயனாளிகள் கோவிட் செயலி மூலம் முன்பதிவு செய்தும், நேரடியாக சுகாதார மையங்களுக்குச் சென்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

அவ்வாறு செல்லும்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்