வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடக்கும் மாட்டுச்சந்தையில், மாடுகளை வாங்குவதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வருவது வழக்கம். தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இவ்விரு மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

நேற்றை மாட்டுச்சந்தையில் 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. 70 சதவீதம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 mins ago

இந்தியா

20 mins ago

விளையாட்டு

9 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்