கல்லூரி மாணவர்கள் 13,625 பேருக்கு இன்டர்நெட் தரவு அட்டைகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் 13,625 மாணவ, மாணவிகளுக்கு இணையவழி கல்வி கற்பதற்கு தினமும் 2 ஜிபி அளவில் இன்டர்நெட் தரவு அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில போக்குவரத்த்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு 2 ஜிபி இன்டர்நெட் தரவு அட்டைகளை வழங்கிப் பேசினார்.

விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தேன்மொழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்