உக்கடம் அல்அமீன் காலனியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

கோவை உக்கடம் அல் அமீன் காலனியின் ஒரு பகுதியில் நீர்வழித் தடத்தை ஆக்கிரமித்து 25 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால், அங்கு குடியிருந்தவர்களுக்கு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 10 வீடுகள் காலி செய்யப்பட்டன. மீதமுள்ள 15 வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும், காலி செய்யவில்லை.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகச் சென்றனர். அப்போது, அங்கு குடியிருந்தவர்களுக்கும், அதிகாரி களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கு குடியிருந்தவர்கள், தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு, வீடுகளை காலி செய்தனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் 15 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

39 mins ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்