மதுரை மாவட்டத்தில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் குடியரசு தினவிழா

By செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் நேற்று முன்தினம் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

காமராசர் பல்கலைக் கழக வளாகத்தில் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். பதிவாளர் வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அலு வலர்கள் பங்கேற்றனர்.

அழகர்கோவில் சாலையிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கொடியை முதல்வர் ஜார்ஜ் ஏற்றினார்.

பேராசிரியர்கள் சிவக்குமார், அகமது, சாந்தி மற்றும் உடற் கல்வித் துறை இயக்குநர் மகேந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடியை ஏற்றினார்.

மதுரை கல்லம்பட்டியிலுள்ள ஆயிர வைசியர் கல்லூரியில் கல்லூரிச் செயலர் ஜெயராமன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. கல்லூரி துணைத் தலைவர்கள் வெங்கடேசன், பெரி சேகரன், பொருளாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை செந்தமிழ் கல்லூரியில் நான்காம் தமிழ்ச் சங்கச் செயலர் மாரியப்ப முரளி தலைமையில் விழா நடந்தது. கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ராசமாணிக்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினார்.

திருவனந்தபுரம் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் நிஷாந் தினி, கல்லூரி முதல்வர் வேணுகா, துணை முதல்வர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் கிறிஸ்டியானா சிங் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சுகந்தா ராமமூர்த்தி கொடி ஏற்றினார். துணை முதல்வர் லில்லி ஜெயசீலி உள்ளிட்ட பேராசிரியைகள், அலு வலர்கள் பங்கேற்றனர்.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில், அதன் செயலாளர் இஸ்மாயில் தலைமையில், மன்றத் தலைவர் சுடலை கொடி ஏற்றினார். துணைத்தலைவர் ஜவகர்லால், பொருளாளர் சிங்கராஜ், வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தலைவர் ஜெகதீசன் தேசியக் கொடியை ஏற்றினார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் ஜெயபிரகாசம் கொடியேற்றினார். நிர்வாகிகள் மோகன், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனையூரிலுள்ள வைகை குடியிருப்பில் குடியரசு தின விழா நடந்தது. முன்னாள் விமானப் படை வீரர் கார்த்திக் கொடி ஏற்றினார். தர் வரவேற்றார். கடற்படை வீரர் பகத்சிங், ராணுவ வீரர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் மெய்யப்பன் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார்.

மாவட்ட ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் அருகே மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் புறநகர் மாவட்டத் தலைவர் பாக்கியம் கொடி ஏற்றினார்.

புதூர் கற்பகநகர் பகுதியில் பேர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த விழாவில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியை சோலம் மாள், ஜான்சிராணி மகளிர் குழுத்தலைவி சாந்தி, தொண்டு நிறுவனத்தின் அறிவழகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

க்ரைம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்