ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்கொப்பரைக்கு கூடுதல் விலை விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், கடந்த வாரத்தைக் காட்டிலும் கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.670 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, "ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 537 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் முதல் தர கொப்பரை 289 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.11,885-க்கும், அதிகபட்சம் ரூ. 13,015 -க்கும் விற்பனையாகின. இரண்டாம் தர கொப்பரை 248 மூட்டை, குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,750 -க்கும், குறைந்தபட்சம் ரூ.7,275-க்கும் விற்பனையாகின. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.670 விலை அதிகரித்துள்ளது. இதேபோல, வரத்தும் கடந்த வாரத்தைக் காட்டிலும் 141 மூட்டைகள் அதிகமாக இருந்தது. மொத்தம் 237 குவிண்டால் ரூ.23 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய் சீசன் தொடங்கியுள்ளதால் கொப்பரை உற்பத்தி அதிகரித்துள்ளது. கொப்பரையில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால், விலை அதிகரித்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

15 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்