நிவர் புயல் நிவாரணம் வழங்க மீனவர்களின் விவரம் சேகரிப்பு

By செய்திப்பிரிவு

நிவர் புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள்ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. வலைகளும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதங்களை மதிப்பீடு செய்தனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்க ரூ.2 கோடி நிதியை தமிழக அரசுகடந்த சில தினங்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பெயர், முகவரி,சேதமடைந்த படகு மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அனைத்து மீனவர்களின் வங்கி கணக்குவிவரங்களையும் சேகரித்துவைத்துள்ளோம். மீனவர்களுக்கு வங்கி கணக்கில் நிவாரணத்தை வழங்குவதா அல்லது காசோலையாக வழங்குவதா என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும். எனவே, நிவாரணம் கிடைப்பதில் எந்த தாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

இந்தியா

36 mins ago

கல்வி

57 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்