திருப்போரூரில் முதல்வர் பிரச்சாரம் பழைய மகாபலிபுரம் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி அதிமுக சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், குறிப்பிட்ட சில மணி நேரம் பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் விரைவில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே ஓஎம்ஆர் சாலையில் வாகனத்தில் நின்றவாறு இன்று (ஜன. 21) காலை 9 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் மேற்கொண்டுள்ளனர்.

முதல்வரின் பிரச்சாரம் நடைபெற உள்ள குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு சென்னையில் இருந்து ஓஎம்ஆரில் வரும் வாகனங்கள் இள்ளலூர் சந்திப்பு அருகே திருப்பிவிடப்படும். பேருந்துகள் அங்கு உள்ள திரையரங்கம் அருகே நிறுத்தி இயக்கப்படும். செங்கல்பட்டு சாலையில் வரும் வாகனங்கள் அரசினர் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நிறுத்தி இயக்கப்பட உள்ளன. இதேபோல், புதுப்பட்டினம் பகுதியில் ஈசிஆர் சாலையில் பிரச்சாரம் மற்றும் மீனவர்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளதால், வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்