முதல்வர் இன்று சேலம் வருகை

By செய்திப்பிரிவு

சேலம்: முதல்வர் பழனிசாமி இன்று (14-ம் தேதி) சேலம் வருகிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (14-ம் தேதி) சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். முதல்வருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்துக்கு வந்து முதல்வர் ஓய்வெடுக்கிறார். பின்னர் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு செல்கிறார். முதல்வரின் தாயார் மறைவு காரணமாக இந்தாண்டு முதல்வர் பொங்கல் பண்டிகையில் ஈடுபடவில்லை.

சிலுவம்பாளையத்தில் இருந்து மாலை சேலம் நெடுஞ்சாலை நகர் திரும்பும் முதல்வர் அங்கு ஓய்வு எடுக்கின்றார். நாளை (15-ம் தேதி) காலை கார் மூலம் மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறார். முதல்வர் சேலம் வருகையை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் எஸ்பி தீபா காணிகர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்