வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஆய்வு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு புதுமைத் தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டத்துக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு ரூ.50 கோடி நிதி அளித் துள்ளது. இத்திட்டத்தைக் கண்கா ணிக்கவும், மதிப்பீடு செய்யவும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் சி.பொன்னையன் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

பல்கலை. துணைவேந்தர் என்.குமார் மற்றும் விஞ்ஞானிகள் அவரை வரவேற்று, அதிநவீன ஆய்வகம் மற்றும் புதுமைத் திட்டத்தின் நடைமுறை செயல்பாடுகளை விளக்கினர். தொடர்ந்து, நானோ தொழில்நுட்ப ஆய்வகம், பயிர் பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆய்வகம், அதிநவீன பூச்சி அருங்காட்சியகம், தென்னை திசு வளர்ச்சி ஆய்வகம், அங்கக இடுபொருட்கள் கண்காட்சி, தீவனப் பயிர் உருண்டைகள் தயாரிப்பு, விரைவு உரக்கழிவு தயாரிப்பு தொழில்நுட்பம், சிறு குறிஞ்சான், உயிரியல் துரித முறை உயிரணு பிரித்தல், தாவரவியல் பூங்கா, வேர் ஆராய்ச்சியகம், சிறுதானியப் பயிர் உற்பத்தி மையம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்