மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு, சீருடை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார். தெற்குமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “மாநகராட்சியில் பணிபுரியும் 1,674 ஆண் தூய்மைப் பணியாளர் கள், 929 பெண் தூய்மைப் பணியா ளர்கள் ஆகியோருக்கு சீருடைகள், காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, பச்சரிசி, வெல்லம், நெய், பாசிப் பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை அடங்கியபொங்கல் தொகுப்பு வழங்கப்பட் டுள்ளது.

மொத்தம் 2,603 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு, சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல், துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொங்கலை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

பின்னர், மகளிர்திட்டம் சார்பில் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன், 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் சுழல் நிதி, 5 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வங்கி கடன் உதவி என மொத்தம் ரூ.13.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 238 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

54 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்