பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

By செய்திப்பிரிவு

பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழுவுக்கு உதவியாக துணைக் கண்காணிப்புக் குழு அமைக் கப்பட்டது. அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணையச் செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார்.

தமிழகப் பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்புக் கோட்டச் செயற்பொறியாளர் சாம். இர்வின், உதவிச்செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பா சனத்துறை செயற் பொறியாளர் பினு பேபி, உதவிப் பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி துணைக் குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர். அப்போது அணையின் மதகுகள் இயக்கம் சீராக இருப்பதாகவும், கசிவு நீர் துல்லியமாக இருப்பதால், அணை பலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்குப் பிறகே, பெரியாறு அணைக்கு நிலத்தடியில் மின்சாரம் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு துணைக் குழுவினர் இன்று (புதன்) அணையை ஆய்வு செய்ய வரு வது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

20 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்