ரூ.4.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 650 பயனாளிளுக்கு ரூ.4.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆவின் பெருந்தலைவர் வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் கே.சி.வீரமணி, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் மட்டும் 40 கிராமப் பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது வரை 11 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரணாம்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்கப் பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 70 சதவீதம் ஏரி, குளங்கள், குட்டைகள் முழுமையாக நிரம்பியுள்ளன’’ என்றார்.

பின்னர், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி அரங்கை அமைச்சர் வீரமணி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, வேளாண் இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீக் ஷித், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

10 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்