மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மனு

By செய்திப்பிரிவு

தமிழக அரசு உதவ வலியுறுத்தி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாவட்டப் பொறுப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘‘அரசு சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்படும் மருந்து, மாத்திரைகள், சிறுநீர் சேகரிக்கும் பை மற்றும் உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும். எங்களுக்கென பிரத்யேக மருத்துவரை நியமிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்