ஆன்லைன் வங்கி மோசடி குறித்து காவல் துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

பொது மக்கள், மூத்த குடிமக்களின் வசிப்பிடம் சென்று ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக தியாகராய நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சென்னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தவும் நடந்து முடிந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் வங்கிமோசடி தொடர்பான போன்அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை பெருநகரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் மேற்பார்வையில் தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் உள்ள மாம்பலம், கோடம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, வளசரவாக்கம், ராயலா நகர், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் பொதுமக்களையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மூத்த குடிமக்களையும் சந்தித்து விழிப்புணாவு ஏற்படுத்தினர்.

வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் வந்தால் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது.ஓடிபி, பாஸ்வேர்டு போன்றவற்றைவங்கிகள் போனில் கேட்பதில்லை என அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்