புதுவையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.14 லட்சம் மோசடி தம்பதி மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

கோவை தொண்டாமுத்தூர் உலியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர்தனது மனைவி ஞானபூங்கோதை யுடன் கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி வந்துள்ளார். தவளக் குப்பம் முத்துமுதலியார் வீதியில்தங்கிய இவர்கள் ஓராண்டுக்குப் பிறகு தீபாவளி சீட்டு பிடித்துள் ளனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பணம் கட்டி வந்தனர். இதுபோல் நல்லவாடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மீனவரான ஊத்துக்காட்டான் என்பவரும்சீட்டு கட்டி வந்துள்ளார். இதன் மூலம் ஜோதிமுருகனும், அவரது மனைவியும் ஊத்துக்கட்டானுடன் நட்பாக பழகினர். இதனால் அவரிடம் ஏழரை லட்சம் ரூபாய் வரைதம்பதியினர் கடன் வாங்கியுள் ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி சீட்டு முடிந்த நிலையில் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. மேலும், ஊத்துக்காட்டானிடம் வாங்கிய கடன் தொகையையும் அவர்கள் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஊத்துக்காட்டான் உள்ளிட்ட சீட்டு கட்டியவர்கள் கேட்டபோது கால அவகாசம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோதிமுருக னும், அவரது மனைவியும் திடீரெனயாருக்கும் தெரியாமல் வீட்டை காலி செய்துவிட்டனர். கணவன், மனைவி இருவரும் சுமார் ரூ.14லட்சம் வரை மோசடி செய்ததுதெரியவந்தது. இதனால் சீட்டு கட்டி யவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை பல இடங்களில் தேடியபோது இருவரும் கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த ஊத்துக்காட்டான் அங்கு சென்று கடனை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்ததோடு, ஊத்துக்காட்டானை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஊத்துக்காட் டான் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக் குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்