திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஆலோசனை

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ‘பிரதம மந்திரி கவுஷால் விகாஸ்’ திட்டம் அமலாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட திறன் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

திட்டத்தினை செயல்படுத்திட பயிற்சியாளர்களை கண்டறிந்து, அவர்களின் திறன்களுக்கு ஏற்ற வாறு தனித்தனி குழுக்களாக உருவாக்க வேண்டும்.

திறன் மேளா மற்றும் விளம்பரம் மூலம் திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, அவர்களுக் கேற்ற திறன் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஆர்.பரமசிவம், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் ஆர்.ராஜேந்திரன், பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மு.செந்தில்வேலன், தொழிற்சாலை பிரதிநிதி அசோக், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் உள்ளிட்ட மாவட்ட திறன் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்