‘நிவர்' புயல் காரணமாக சேலத்தில் இருந்து சென்னை, புதுவை, கடலூருக்கு அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ‘நிவர்’ புயல் காரைக்கால்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் நிலையில், சேலத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூருக்கு அனைத்து அரசுப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து இயக்கப்படும் 1,220 பேருந்துகளில் 75 சதவீதம் பேருந்துகள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில், 20 சதவீதம் குளிர்சாதன பேருந்துகள் கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற கோட்டங்கள் சார்பில் 2,800 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயலால் சென்னைக்கு பேருந்துகள் இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கு உயர் அதிகாரிகள் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு நகரங்களில் இருந்து சேலம் மார்க்கமாக இயக்கப்படும் 58 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், இது தவிர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம், கோவை, விழுப்புரம் கோட்டங்கள் சார்பில் இயக்கப்படும் 420 பேருந்துகளும் இயக்காமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 34 பேருந்துகள், கடலூர் 20, புதுச்சேரி 10, சிதம்பரத்துக்கு இயக்கப்படும் 8 பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்படவில்லை. புயல் கரையை கடந்ததும், அதன் பின்னர் உள்ள வானிலை மாற்றங்களை ஆய்வு செய்த பின்னரே, பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை-கோவை ரயில்கள் ரத்து

சென்னையில் இருந்து கோவை மார்க்கமாகவும், கோவையில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று (26-ம் தேதி) ரத்து செய்யப்படு வதாக சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் இருந்து சேலம் வழித்தடமாக கோவைக்கு இயக்கப்படும் ரயில் எண்கள்: 02675, 06027, 02680 மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில் எண்கள்: 02676, 02678, 02679 ஆகியவை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் பேருந்துகள் நிறுத்தம்

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவையில் இருந்து ஈரோடு வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த நான்கு அரசு விரைவு பேருந்துகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 secs ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்