விதிமீறல் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி 28-ல் திமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

முன்னாள் மேயரும், சென்னை தெற்குதிமுக மாவட்ட செயலருமான மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயித்தல் குறித்த மத்திய அரசின் சட்டம் 2008-ம் பிரிவு 8-ன்படி, மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக மாநில அரசு சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம் 200 அடி சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் இணைப்பு சாலை மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது.

எனவே இவற்றை அகற்றக் கோரி வரும் 28-ம் தேதி சோழிங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்