காவலர் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்தும் நிறுவனத்தை தேர்வு செய்யும் டெண்டருக்கு கிரண்பேடி ஒப்புதல்

By செய்திப்பிரிவு

காவலர் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விடும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்பு தல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் காவலர் பணியிடங் களை நிரப்புவதற்கான உடல் தகுதித் தேர்வு நவம்பர் 4-ம் தேதி முதல் நடப்ப தாக இருந்தது. காவலர் உடல்தகுதி தேர் வின்போது டிஜிட்டல் முறைக்கு பதிலாக விசில் ஊதி கணக்கிடும் முறையை பயன்படுத்துவதை ஏற்க மறுத்து தேர்வை ஒத்தி வைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு தரப்பில் காவலர் உடல்தகுதித் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத் தும் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விட அனுமதி கோரி ஆளுநர்கிரண்பேடிக்கு கோப்பினை அனுப்பி யிருந்தது. அக்கோப்புக்கு நேற்று ஒப்பு தல் அளித்தார்.

அதேபோல் மொத்தம் 32 கோப் புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்