லடாக் பகுதியில் மரணமடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு நல்லகண்ணு ஆறுதல்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்ப சாமி(34), கடந்த 2 நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் வீரமரண மடைந்தார். அவரது வீட்டுக்கு நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் வந்து, கருப்பசாமியின் மனைவி தமயந்தி, அவரது தந்தை கந்தசாமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கருப்பசாமியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “ராணுவ வீரர் மனைவி தமயந்தியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு வீடு கட்டித்ததர வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த பின்னர் தமிழக அரசு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது. அவர்கள் முன்னதாக அறிவித்திருக்க வேண்டும். இருந்தாலும் இதனை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் மண்டல பொறுப்பாளர் எஸ்விஎஸ்பி. மாணிக்கராஜா கருப்பசாமியின் குடும்பத்தி னரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்