தன்னிச்சையாக முடிவு எடுக்கும்ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை சார் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அடுத்த எஸ்.மலையாண்டிப்பட்டணம் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே உள்ள பிரச்சினையால் கடந்த 9 மாதங்களாக வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். திட்டங்களை செயல்படுத்த துணைத் தலைவர் டி.ரவி ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், துணைத் தலைவர் டி.ரவி மற்றும் 3 உறுப்பினர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். அதில்,‘‘ஊராட்சியில் நடைபெற்ற பாலம் கட்டும் பணி, கரோனா கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணிகளில் முறையான தகவல் இல்லாமல் காசோலையில் கையெழுத்து மட்டும் கேட்கிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர். பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் உடன் சென்றிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்