விருத்தாசலம் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் மறுபிரேத பரிசோதனை கோரி நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம் சிறை கைதி உயிரி ழந்த விவகாரத்தில் மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவ ரது மனைவி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் என்பவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸாரால் அக்டோபர் 30-ம் தேதி கைதுசெய்யப்பட்டு விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 4-ம் தேதி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்

செல்வமுருகன் உடல் நலக் குறைவால் உயிரிழக்கவில்லை. போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார். அவரது உடலை, புதுச்சேரியைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். இந்தநிலையில் மறு பிரேத பரிசோ தனை தொடர்பாக விருத்தாசலம் நீதித்துறை நடுவரிடமே முறையி டலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து செல்வமுருகன் மனைவி பிரேமா, விருத்தாசலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்திடம் நேற்று மனு அளித் தார். தனது கணவரின் உடலை மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட நடுவர் ஆனந்த், ஜிப்மர் மருத்துவர்கள் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்படும் குறித்து தேதி நாளை (இன்று) தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்ததாக செல்வமுருகன் மனைவி பிரேமா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்