முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டத்தில் சேர வேண்டாம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசிடம் அனுமதி பெறாத, எவ் வகை முறைப்படுத்தப்படாத வைப் புத் திட்டத்திலும் பொதுமக்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முறைப்படுத்தப் படாத வைப்புத் திட்டங்களை தடைசெய்யும் சட்டம்-2019 நடை முறைக்கு வந்துள்ளது. சட்ட விரோத வைப்புத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து தடுத்து அவர்களின் பணத்தை பாது காப்பதே இதன் நோக்கமாகும்.

இச்சட்டம் தற்போதுள்ள மாநில வைப்புத் தொகையாளர்களின் உரிமை பாதுகாப்புச் சட்டங்களின் சிறந்த நடைமுறைகளைப் பின் பற்றுகிறது.

மேலும், இச்சட்டத்தின் மூலம் மோசடி நபர்களின் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்ய முடி யும்.

முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களுக்கு இத்தடை சட்டத் தின்படி 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் உண்டு.

முறைப்படுத்தப்படாத வைப் புத் திட்டங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட சார்பு, துணை மாவட்டஆட்சியரிடம் புகார் தெரிவிக்க லாம். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசிடம் அனுமதிபெறாத எவ்வகை முறைப்படுத் தப்படாத வைப்புத் திட்டத்திலும் சேர்ந்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்