பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நவ. 26-ல் பொது வேலை நிறுத்தம் அனைவரும் ஆதரவு தர வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

வருகிற 26-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் வணிகர்கள் உட்பட அனைவரும் ஆதரவுதர தொழிற் சங்கங்கள் வேண்டு கோள் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவல கத்தில் புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண் டும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாள் வேலை வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் வரும்26-ம் தேதி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

இவற்றோடு புதுச்சேரியில்அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு நலவாரியம் செயல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளை புணரமைக்க வேண்டும். அரசு சார்புநிறுவன ஊழியர்களுக்கு நிலுவைஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங் கங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த முழு அடைப்பு போராட் டத்துக்கு அனைத்து வணிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து, லாரி, டெம்போ, லோடு கேரியர், ஆட்டோ உரிமையாளர் சங்கங்கள், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார். பேட்டியின்போது சீனுவாசன் (சிஐடியு), ஞானசேகரன் (ஐஎன் டியுசி), மோதிலால் (ஐஏசிசிடியு), செந்தில் (எல்எல்எப்), வேதா.வேணுகோபால் (எம்எல்எப்) அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன், ஆட்டோ ஓட்டுநர் சங்கதலைவர் மணிவண்ணன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

55 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்