புதுவையில் உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்து துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் ஏதும்பெறாமல் மோட்டார் சைக்கிள்களை பொதுமக்க ளுக்கு சிலர் வாடகைக்கு விடுவதாக போக்குவரத்து துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக 'சைக்கிள் ஸ்டோர்' என்ற பெயரில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப் படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானதாகும்.

உரிமம் பெற்ற மோட்டார் சைக்கிள்கள் மஞ்சள் நிற `நம்பர் பிளேட்' பொருத்தப்பட்டு இருக்கும். இதுவே அதற்கான அடையாளம். எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். புதிய நபர்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும் அவ்வாகனங்களை இயக்கும்போது தேவையற்ற விபத்துக்களும் ஏற்பட ஏதுவாகிறது. எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்து துறையின் உரிய உரிமம் பெற்றபின் வாடகைக்கு விடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்