உடற்கல்வி ஆசிரியர் பணி முதல்வரிடம் கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கக் கோரி சேலத்தில் முதல்வரிடம், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு அளித்தனர்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 1,250 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 551 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளிக்க வந்தனர். முதல்வரை சதீஷ், ராஜா, சீதாலட்சுமி, கவிதா ஆகியோர் சந்தித்து மனுவை அளித்தனர். மற்றவர்கள் முதல்வர் வீட்டு அருகே உள்ள சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதுதொடர்பாக மனு அளிக்க வந்தவர்கள் கூறியதாவது:

கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. 2017-ம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 551 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 1,400 உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம் இருக்கும் நிலையில், தேர்ச்சி பெற்ற பலர் 40 வயதை நெருங்கிவிட்டனர். எனவே, அரசு கருணை காட்டி, தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஓரிரு வாரத்தில் நல்ல தகவல் வரும் என முதல்வர் உறுதி அளித்திருப்பது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

27 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

29 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்