பாபநாசம் சார் பதிவாளர் அலுவலகத்தில்ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ.40,500 சிக்கியது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் லஞ்சம், முறைகேடு அதிக அளவில் நிகழ்வதாக புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், இந்த அலுவலகத்தில் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.மனோகரன் தலைமையில் ஆய்வாளர்கள் வி.பத்மாவதி, பி.சசிகலா, ரமேஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.40,500 கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் யாருடையது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதுதொடர்பாக சார் பதிவாளர் ஜெயஷீலா ராணி(48), பாபநாசம் வங்காரம்பேட்டை 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் பாரதிதாசன்(65) உள்ளிட்டோரிடம் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாலை 5.30 மணியளவில் தொடங்கிய இச்சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்