கரோனா தொற்று காலத்திலும் கேரள வங்கிகள் அபார வளர்ச்சி :

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கபட்டது. கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் வெளிநாடு களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 லட்சம் பேர் கரோனாவால் வேலையிழந்து கேரளா திரும்பினர். இதன் காரணமாக கேரள மாநில பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.

எனினும் கரோனா காலத்திலும் கேரள வங்கிகள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் வெளி நாடுகளில் வாழும் மலையாளிகள் ரூ.2,08,698 கோடியை கேரள வங்கி களில் முதலீடு செய்தனர். நடப்பாண்டில் மார்ச் 31-ம் தேதி புள்ளி விவரத்தின்படி வெளிநாடுவாழ் மலையாளிகள் ரூ.2,29,636 கோடியை முதலீடு செய்துள்ளனர். இதேபோல கடந்த 2019-20-ம் நிதியாண்டில் உள்மாநில முதலீடு ரூ.3,35,674 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி உள்மாநில முதலீடு ரூ.3,76,278 கோடியாக உள்ளது. உள்நாடு, வெளிநாட்டு முதலீடு குவிந்திருப்பதால் கேரள வங்கிகள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன.

இதுகுறித்து மூத்த வங்கியாளர் ஆதிகேசவன் கூறும்போது, "கரோனாவால் வேலையிழந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய மக்கள், கையிருப்பு பணத்தை வங்கிகளில் முதலீடு செய்தனர். கரோனா அச்சுறுத்தல் நீங்கி ஏராளமானோர் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள னர். அவர்கள் வங்கிகளில் அதிகமாக முதலீடு செய்கின்றனர். மேலும் மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களால் வங்கி கணக்குகளின் இருப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கேரள வங்கிகள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன " என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

ஜோதிடம்

13 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்