உத்தராகண்ட் நிலச்சரிவில் உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

உத்தராகண்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக பலத்தமழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கிட்டத்தட்ட அங்கு அனைத்து மாவட்டங்களுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

குறிப்பாக, நைனிடால், சம்பாவத், சமோலி, பவுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும், தொடர் மழையால் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.  இவ்வாறு, உத்தராகண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக இருந்தது.

இதனிடையே, கனமழைக்கு முன்பாக உத்தராகண்டில் உள்ளஇமயமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் மாயமாகி இருந்தனர். இந்நிலையில், அவர்களில் 9 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. 2 பேர் மீட்கப்பட்ட னர். இவர்களையும் சேர்த்து உத்தராகண்ட் மழைக்கு உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 5000-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படை யினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் உத்தராகண்டில் தோராயமாக ரூ.7,000 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்