உத்தராகண்டில் கனமழைக்கு உயிரிழப்பு 34 ஆக உயர்வு :

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட்டில் மழைக்கு மேலும் 29 பேர் இறந்ததையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என்றுவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்ததுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த திங்கட்கிழமை மழைக்கு 5 பேர் இறந்தனர். நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக குமான் பிராந்தியத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்தன. பலர் இடிபாடுகளிடையே சிக்கினர். மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 29 பேர் இறந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. நைனிடால் மாவட்டத்தில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நைனிடால் செல்லும் 3 பாதைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து நைனிடால் துண்டிக்கப் பட்டுள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் இறந்துள்ளதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளது என்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று டேராடூனில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் என்றும் தேவையான எல்லா உதவிகளையும் அளிக்க பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றும் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்