புதிதாக 14,313 பேருக்கு கரோனா : 7 மாதங்களில் பதிவான குறைவான அளவு

By செய்திப்பிரிவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் கரோனா இரண்டாம் அலை தொடங்கியது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் வைரஸின் வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு கடுமையாக காணப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவியதால் உயிரிழப்பும் அதிகரித்தது. பின்னர், மத்திய, மாநில அரசு கள் மேற்கொண்ட கூட்டு நடவ டிக்கைகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக தினசரி கரோனா பாதிப்பு அளவு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 7 மாதங்களில், அதாவது 224 நாட்களில் இல்லாத குறைவான அளவாகும். அதன்படி, நாட்டில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,14,900-ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில், பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 26,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடை வோரின் விகிதம் 98.04 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு பதிவான அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்