அக்.18 முதல் நூறு சதவீத பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததை தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 33 சதவீத பயணிகளுடன் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. தற்போது 85 சதவீத பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் 100% பயணிகளுடன் இயங்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதேநேரம், கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்