பெங்களூருவில் 10 நாட்களில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்தன :

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன.

பெங்களூரு ஆடுகோடி அருகே லக்கசந்திராவில் கடந்த 28-ம் தேதி 50 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கடந்த 1-ம் தேதி டைரி சர்க்கிள் அருகே கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் இடிந்தது. கடந்த 3-ம் தேதி நாகரபாவி அருகே 3 மாடி இடிந்து விழுந்த‌து. இந்த கட்டிட விபத்துகளில் மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கஸ்தூரி நகரில் 5 மாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. அதில் வசித்த 8 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சில மணி நேரங்களில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா கூறியதாவது:

அண்மையில் இடிந்து விழுந்த 4 கட்டிடங்களில் 3 கட்டிடங்களுக்கு முறையாக மண் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. க‌ஸ்தூரி நகர் கட்டிடம் தரைதளத்துடன் 2 மாடி வீடு கட்ட அனுமதி பெற்றப்பட்டு, விதிமுறையை மீறி கூடுதலாக 2 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்துள்ளது. விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்