பிரதமர் நரேந்திர மோடிக்கு 71-வது பிறந்த நாள் : குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள்ள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 71-வது பிறந்த நாள். நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாளை பாஜகவினர் சேவை நாளாக கடைபிடித்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடினர். பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘’பிரதமர் மோடி நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் நாட்டுக்கு அவர் ஊக்கத்துடன் செய்துவரும் அயராத சேவை தொடரவும் வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘பிரதமர் மோடியின் தனித்துவமான தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘பல ஆண்டுகளாக உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அளித்துள்ள பிரதமர் மோடி, மக்களால் விரும்பப்படும் தலைவர் எப்படி திகழ வேண்டும் என்பதை உலகிற்கு காட்டி வருகிறார்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடிஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் புரி, ஜிதேந்திர சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாஜக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங் கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்