336 பண்டிதர் குடும்பங்கள் காஷ்மீர் திரும்ப பாரமுல்லாவில் ரூ.40 கோடியில் குடியிருப்புகள் :

By செய்திப்பிரிவு

பாரமுல்லா: தீவிரவாதம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறி நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் பாரமுல்லாவில் புலம்பெயர்ந்த பண்டிதர் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கு மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் நேற்று அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர் சோனோவால் கூறும்போது, “மொத்தம் 336 பண்டிதர் குடும்பங்கள் வசிக்கும் வகையில் இங்கு ரூ.40 கோடியில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. காஷ்மீர் பண்டிதர்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். இதனால் அவர்கள் ஒன்றாக அமைதியாக வாழ முடியும். மக்களின் விருப்பத்தின் பேரிலேயே இங்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. பண்டிதர்களுக்கு இங்கு குடியிருப்புகள் கட்டும் முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்த பாரமுல்லா மற்றும் காஷ்மீர் மக்களுக்கும் நன்றி கூறுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்